கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் இருந்து 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை மீட்பதற்காக இலங்கை மத்திய வங்கி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 50 மில்லியன் அமெரிக்க டொலர் 2 அரச வங்கிகள் ஊடாக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க இதற்கு மேலதிகமாக அதிக பணம் தேவைப் பட்டால் இலங்கை மத்திய வங்கி அதனை வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி யின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித் துள்ளார்.