இந்தியாவில் கணவரை விவாகரத்து செய்த நிலையில் வேறு நபரை திருமணம் செய்யவிருந்த இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் (29). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2 ஆண்டுகளுக்கு முன் நீலம் விவாகரத்து செய்தார்.இதன்பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர், இருவரும் திருமணம் செய்யவும் முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நீலம் காணாமல் போனார்.இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நீலம் சடலமாக இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர் உடலில் அதிகளவு நகைகளும் இருந்தன. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து விசாரித்த போது நீலமை கொன்றதை ஒப்பு கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், நீலமுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அடிக்கடி சண்டை போட்டோம், இரு தினங்களுக்கு முன்னர் சண்டை முற்றியதால் அவரை கொலை செய்து உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு வைத்தேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பொலிசார் ரவியை கைது செய்துள்ளனர்.