எம்பிலிபிட்டி செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபானம் அருந்திக் கொண்டிருந்த குழு ஒன்றின் உறுப்பினர்களுக்கு இடையே இடம் பெற்ற வாகு வாதமே இந்த சம்பவத்தின் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவருக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதத்தின் காரணமாக ஒருவர் இன்னொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் மீது பிறிதொருவர் ஆயுதத்தால் தாக்கியுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பிள் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்