உதவி வழங்கியவர்கள்:பேரப்பிள்ளைகளாகிய தீபன்,வினோ,றசிவன்,ஜெயந்தி, ஜெனி (பிரான்ஸ் )
காரணம்:அமரர் பொன்னுத்துரை பூமணி அவர்களின் 31 நாள் நினைவு தினம்.
இன்றைய தினம் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மா அவர்களின் நினைவாக பழுகாமம் சிறுவர் இல்லத்திற்கு ஒரு நாள் முழுநேர உணவு வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன்
நாச்சிக்குடாவில் உள்ள மகளிர் அணி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 50,000,00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்க்கள் பூமணி அம்மாவின் நினைவாக 15 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.இந்த நாளில் இந்த உதவியினை வழங்கிய அன்புள்ளங்களுக்கு நன்றி கூறுவதுடன் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
இன்றைய தினம் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மா அவர்களின் நினைவாக Helping Hearts News
No Comments1 Min Read