இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது.
எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு 7, விஜேராமய மாவத்தையிலுள்ள ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆய்வுப் பணியகத்தில் தொழில்செய்பவர்.வாரத்தில் 05 நாட்களிலும் அவர் வேலைநாட்களில் அலுவலகத்திற்கு வருவதற்காக பஸ் பிரயாணத்தை தவிர்த்து வருகின்றார்.
குறிப்பாக தனது சைக்கிளிலேயே அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றார்.கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து ஹொரண – சியம்பலாகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அப்படிப் பார்த்தால் தினமும் அவர் 42 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணத்தில் செலவழிப்பதோடு,இதுவரை 5 இலட்சத்திற்கும் அதிகமான தூரம் சைக்கிளில் பயணம் செய்திருக்கின்றார்.
1995ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 26 வருடங்களாக அவர் இவ்வாறே தனது சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்று வந்துகொண்டிருக்கின்றார் என்பது ஆச்சரியம்தானே.அதனைவிட மிகப்பெரிய ஆச்சரியமாக செய்திதான் அவர் பஸ் பயணத்தினை தவிர்த்துக் கொண்டதால், அதற்காக செலவு செய்கின்ற பணமாக 60 இலட்சத்திற்கும் மேல் சேமிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றார்.பீரிஸ் போதைப்பொருள்,புகைத்தல் ஏன்,வெற்றிலைக்கூட பயன்படுத்தாதவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.