2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் ஆண்டின் சிறந்த நடப்பு விவகாரங்களுக்கான நிகழ்ச்சிக்கான விருதை அத தெரணவின் “ரீபில்ட் ஸ்ரீலங்கா” (Rebuild Sri Lanka)நிகழ்ச்சிக்காக ருக்மல் மல்லவவுக்கு கிடைத்தது.
இந்த விருது வழங்கும் விழாவில் அத தெரண அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட, கே.சீ. சாரங்க இயக்கிய Science for Life நிகழ்ச்சி ஆண்டின் சிறந்த கல்விசார் நிகழ்ச்சிக்கான விருதையும் வென்றுள்ளது.
அதேநேரம் 2026 சுமதி விருது விழாவில், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி புலனாய்வுச் செய்தி அறிக்கையிடலுக்கான விருது, அத தெரண செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட, தினேந்திர ரன்சிறி இயக்கிய கடல் வழியிலான போதைப்பொருள் கடத்தல் என்ற செய்தி அறிக்கை வென்றுள்ளது.
ஆண்டின் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை அத தெரண தொலைக்காட்சியின் பாரிந்தியா குணசேகர வென்றுள்ளார் .
அத்துடன் ஆண்டின் சிறந்த அரசியல் நிகழ்ச்சிக்கான விருது, அத தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் “360” நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.
2026 சுமதி விருது விழாவில், சிறந்த தொலைக்காட்சி நடப்புச் செய்தி அறிக்கைக்கான விருதை ‘அத தெரண’ செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட, ரவிந்து விஜேசிங்க இயக்கிய பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற செய்தி அறிக்கை வென்றுள்ளது.
டிஜிட்டல் ஊடகப் பிரிவின் கீழ், Best Lifestyle and Fashion நிகழ்ச்சிக்கான விருதை தெரண மெக்ரோ என்டர்டெய்ன்மென்ட்டின் (Derana Macro Entertainment) “பல்ஸ்” (Pulse) இணையத்தளம் வென்றுள்ளது.

