இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 90 நாட்கள் தங்கியிருப்பதற்கு இது பல வாய்ப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின் அடிப்படையில் புதிய விசா நடைமுறைக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.