வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.
அதனுடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது.
இதன்படி வீடு புகுந்து இடம்பெற்ற இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உள்ளடங்கிய குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இரு திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
விடுதலை புலிகளுக்கு 42 கோடி மாற்ற முயற்சித்த பெண் விமான நிலையத்தில் அதிரடிக் கைது