சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் தொடர்பாக, மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 505 கடைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் உட்பட 383 பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 451 பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
860 பயணிகள் போக்குவரத்து பஸ்கள், 207 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்கள் மற்றும் 1245 கடைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.