11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 பேர் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் சிறுமியை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை மது அருந்தவும் பழக்கப்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் இராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தர்கள் எனவும் கூறப்படுகின்றது.