தென்னிந்திய மாநிலமான கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபரான 33 வயதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 21ஆம் திகதி மாலை, வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்ற தர்ஷினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அச்சமடைந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத்தினருக்கு அறிமுகமான கார்த்திக் என்பவர், மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
அடுத்த நாள் கண்ணம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் சிறுமி தர்ஷினி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜை கைது செய்தனர்.
விசாரணையின் போது, தென்னந்தோப்புப் பகுதிக்குச் சிறுமியை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

