அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.