மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோர் இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்கருக்குச் சென்றது. கடத்தல்காரகள் கென்யா மற்றும் இந்தியா ஊடாக இந்த நாட்டிற்கு வந்துள்ளனர்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை- நீதிமன்றத்தில் மனு
“ஹரக் கட்டா” மற்றும் “குடு சலிந்து” ஆகியோருடன் மேலும் ஆறு பேர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், இது தொடர்பில் மடகஸ்கர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உயிருக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரி சலிந்து மல்ஷிக நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் நிலைப்பாட்டை எதிர்வரும் 20ஆம் திகதி அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிகவின் தாயாரால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ. மரிக்கார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.