2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டிற்கான தரம் 6 க்கான மதிப்பெண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேசமயம் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.