நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஏசி இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும் போது, அதிலிருந்த எரிவாயு குழாய் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கண்டி- இரண்டாம் இராஜசிங்க மாவத்தையிலுள்ள இன்று பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பராமரிப்பு தொழிநுட்பவியலாளரான 24 வயதுடைய மொஹமட் ஹிசாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இதன்போது எரிகாயங்களுக்கு உள்ளான அவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.