சவூதிவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் இலங்கையர்கள் உட்பட12 பேர் காயமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் சவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (11-02-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ரியாத் – எல்லைக்கு அருகில் உள்ள யேமன் கிளர்ச்சியாளர்களின் விமான நிலையத்தை குறிவைத்து சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை ஆகாயத்தில் வெடிக்கச் செய்ததில், விமானதாக்குதலின் போது குப்பைகள் விழுந்ததில் இவ்வாறு காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நண்பகல் நேரத்தில் ட்ரோன் தாக்குதலில் இருந்து துண்டுகள் விமான நிலைய மைதானத்திற்குள் விழுந்து சில கண்ணாடி முகப்புகள் சேதமடைந்தன.
அதன் சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர்காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இச்சம்பவத்தில் இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.