சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டைலர் கோஹன் என்பவர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் டோர்டாஷில் அசோசியேட் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஆசையால் 40 முறை விண்ணப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் “விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு சிறந்த கோடு உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.
39 நிராகரிப்புகள், 1 ஏற்பு” என்று அவர் லிங்க்ட்இன் இடுகையில் கூறியது இப்போது வைரலாகி வருகிறது. அதோடு கூகுள் உடனான அனைத்து மின்னஞ்சல் தகவல்தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட்டையும், கடைசியாக ஜூலை 19 அன்று வேலை கிடைத்த பணி ஆணையையும் அவர் பகிர்ந்துள்ளதன் மத்தியில் சில பயனர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் விவரித்துள்ளனர்.