வவுனியா நகரப் பள்ளிவாசலில் சுகாதாரப் பிரிவினரால் சோதனை நடத்தப்பட்டதுடன், தொழுகைக்காக ஒன்று கூடியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வவுனியா நகரப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் செல்வதாக சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இன்று (08) சுகாதாரப் பிரிவினர் விசேட சோதனை நடத்தினர்.
இதன்போது தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்கு வருகை தந்தவர்களின் விபரங்கள் சுகாதாரப் பிரிவினரால் பெறப்பட்டதுடன், கடும் எச்சரிக்கையுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அத்துடன், பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் சுகாதார அறிவுறுத்தல் குறித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மக்களுடன் தொழுகை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு பள்ளிவாசலின் பிரதான வாயில்கள் மூடப்பட்டது.
மேலும், சுகாதார நடைமுறைளை மீறி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.