வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் கடந்த வருடம் புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவர் உயிரிழந்தார்.
இவரின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது நண்பர்கள் இன்றைய தினம் (01-02023) விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்று கூடி உயிரழந்தவரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வு ஒன்றை அனுஷ்டித்திருந்தனர்.
மேலும் குறித்த பகுதியில் நிழல் தரும் மரங்கள் சிலவற்றையும் உயிரிழந்த நண்பன் சார்பாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு பெறுமதியான உலர் உணவு பொதியையும் வழங்கியுள்ளனர்.