நாட்டில் தற்போது தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தக நிலையங்களை நோக்கி செல்லும் இலங்கை மக்கள்! | Gold Sale Sri Lankan People Going Business Centers
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தங்க நகை கொள்வனவில் மக்கள் ஈடுபடுவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் இந்த வாரம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது