வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால் இந்த நிலை ஏற்படுமெனவும் அச் சங்கம் கூறியுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பாரிய மின்வெட்டு ஏற்படும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.