நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறி களின் விலைகள் வரலாறு காணாத அளவில் வேகமாக அதிகரித்துள்ளன.
போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகள் வரலாறு காணாத வகையில் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு டிசம்பர் 3ஆம் வாரம் வரை தொடரலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறி விலைகள் கட்டுப் படியாகாத அளவுக்கு உயரக்கூடும் என மலையக மரக்கறி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரலாறு காணாத வகையில் இன்றைய நாட்களில் அதிக விலைக்கு மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
நுவரெலியாவில் மரக்கறி விவசாயிகள் பயிர் செய் வதை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பேலியகொட மெனிங் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், சமைத்த உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறான நிலையில் தற்போதைய சூழ்நிலையால் அந்த உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் சாத்தியம் காணப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.