மொனராகலை – பிபில பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (24-12-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பதுளையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து மேலும் தெரியவருவது,
பிபில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிபில- அம்பாறை பிரதான வீதியில் அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் பயணித்துக்கொண்டிருந்த லொறியை முந்திச் செல்ல முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.