மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கும். குடும்ப ஒற்றுமையில் இருந்து வந்த விரிசல்கள் மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட லாபம் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். குடும்ப பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த இடத்திலிருந்து பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விவேகம் தேவை.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதால் அவதிப்பட நேரிடும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் ஒன்று நடக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சொல்ல சொல்லிலிருந்து தவறாமல் இருப்பது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய நண்பர்களின் மறு அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள நீங்கள் உங்களுடைய நிதானத்தில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறு சிறு பிரச்சனைகளையும் ஊதி பெரிதாக்காமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் எனினும் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூர இடங்களுக்கு பிரயாணம் செய்யும் சந்தர்ப்பங்கள் அமையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நீங்கள் சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நிதானம் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விட்டு விட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரக்கூடிய வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிவுக்கு வரும். குடும்ப பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரிகள் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் யோகம் வந்து சேரும். தடைபட்ட சுப காரியம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கையில் எடுத்த காரியத்தை காலதாமதம் இல்லாமல் முடித்து விடுவது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரலாம். நண்பர் ஒருவரின் சுயரூபம் தெரிய வரும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். புதிய தொழில் துவங்க இருப்பவர்களுக்கு சாதக பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதால் அவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகம் இருந்தாலும் பலன்கள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.