மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருந்து வருகிறது. சுப காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை தரக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் லாபத்தை காண பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணம் கையில் புழங்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எது நடக்கும் என்று நினைத்தீர்களோ அது வேறு விதமாக நடக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் லாபம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் இருப்பது நல்லது. வேகத்தை விட விவேகம் காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தையில் கவனம் வேண்டும். சுய தொழிலில் புதிய யுக்திகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளை மற்றவர்கள் பெரிதும் பாராட்டுவார்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவு எடுப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்ப பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லதல்ல! குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் காணக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இல்லாத தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சியை விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான சில பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சுய தொழிலில் நீங்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது முக்கியமாகும். அவசரப்பட்டு குறுக்கு வழியை கையாள வேண்டாம் ஆபத்து காத்திருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நீடிக்கும். சுய தொழிலில் சுய லாபம் காண்பீர்கள். தங்களுக்கு கீழ் பணியை புரியும் பணியாளர்களையும் கவனிப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்களை அவிழ்க்க முயற்சி செய்வீர்கள். அனாவசியமான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் கோபத்திற்கு தூண்டி விடப்படுவீர்கள், முன் கோபத்தை தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை காணப் போகிறீர்கள். கணவன் மனைவியுடைய அன்னோன்யம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் மனதை கவரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை எதிர்ப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொருளாதார ரீதியான பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த சறுக்கல்கள் படிப்படியாக மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர் பார்ப்பதை விட சிறந்த லாபத்தை காணக்கூடிய வாய்ப்புகள் உண்டாகிறது. பணம் பல வழிகளில் இருந்து வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை இழந்து விடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லையை சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்