மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தொடங்க இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு இருந்து வந்த தடைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரும் இனிய நாளாக அமைய உள்ளது. உங்களுக்கு தலைவலியாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். சுப காரியங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வந்த நிலை காணப்படலாம். ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அனுகூலமான பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூட்டு முயற்சி நற்பலன் கொடுப்போம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மனதில் கொள்ளாமல் செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையில்லாத வம்பு வழக்குகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் இருந்து வந்த தொந்தரவுகள் குறையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கவலைகள் தீரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த கலகங்கள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சார் தான் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன் பின் தெரியாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்து அளவிற்கும் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய மனதிற்கு பிடித்தவாறு நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவி உறவுக்கு இடையே நெருக்கம் மிகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொலை தூர இடத்திலிருந்து சுப செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பயணங்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.