மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு சில விஷயங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும் அற்புதமான நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. சுய தொழிலில் அதிக லாபம் காண புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படலாம் கவனம் வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த இனிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த விரிசல் மெல்ல மறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வருவதற்கான அமைப்பாக இந்த நாள் அமைந்திருக்கிறது. சுப காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் பண ரீதியான பிரச்சனைகள் வலுப்பெறும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன கவலை அகலும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புடன் செயல்பட்டால் வெற்றிகள் குவிய கூடிய இனிய அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களை வளர்க்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. எதிலும் நீங்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க பேச்சில் இனிமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் பகை வேண்டாம்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு கடுமையான முயற்சிகள் செய்யக்கூடிய அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. எதிலும் சோம்பேறித்தனம் படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழந்தது திரும்ப கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வளரக்கூடிய அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு வந்து சேரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் நேர்மறையுடன் அணுகும் அமைப்பாக இருப்பதால் இந்த நாள் பாசிட்டிவாக செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு வைராக்கியத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவால் நிறைந்த அமைப்பாக உள்ளது. உத்தியோகஸ்தர்கள் போட்டிகள் வலுவாகும் என்பதால் கூடுதல் முயற்சி செய்வது அல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய மனதில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும் அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வருவது வரட்டும் என்று அதன் போக்கில் விட்டு விடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு காரணமாக சோர்வு ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நற்செய்திகள் கிடைக்கக்கூடிய அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும் வாய்ப்பு கிட்டும். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வந்த வாய்ப்பை இழந்து விட வேண்டாம். சுய தொழிலில் எதிர்பாராத தடைகள் வரலாம் கவனம் வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு துடிப்புடன் செயல்படக்கூடிய அமைப்பாக இந்த நாள் அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவிருக்காது. போட்டி மனப்பான்மை இருக்க வேண்டுமே தவிர பொறாமை குணத்தை விட்டொழியுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராகும்.