மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சச்சரவுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் முன்னேறும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த விரிசல்கள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்த விஷயங்கள் பெறுவதில் கால தாமதம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நாள் நீங்கள் தேவையற்ற அலைச்சலை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. அனாவசிய பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில நம்பிக்கைகள் பொய்த்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை உயரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். எவரையும் தேடி செல்ல வேண்டாம் தேவைப்பட்டால் அவர்களாகவே வந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். சுயதொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனநிலையில் தடுமாற்றம் இருக்கலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் வந்து சேரும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மன கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் இணக்கமாக செல்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடையப் போகிறீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் அடங்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உடல் நலன் தேறும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வெற்றி வாகை அடையக்கூடிய நல்ல வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஊடல்கள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிலும் ஆர்வம் அதிகமாக காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்கள் சொல் கேளாமல் உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த விரிசல் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு சுப காரியங்களில் இருந்து மந்த நிலை மாறும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நிதானத்தை இழக்காமல் இருப்பது நல்லது. சிலர் உங்களை தூண்டி விட வாய்ப்புகள் உண்டு எனவே கவனமாக இருக்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றி இருப்பவர்கள் இனம் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்பகை தீரும் வாய்ப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சிலரின் மீது இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை ஏமாற்றத்தை கொடுக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல் உடனுக்குடன் கவனிப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திடீரென மனம் திருந்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்வீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்காத அளவிற்கு லாபத்தை காண இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் உங்களுக்கு காலதாமதமாக வாழ்த்துகள் உண்டு எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் நீங்கள் புதுமைகளை படைக்க இருக்கிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வது நல்லது.