மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய பொறுப்புகளை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமையை கையாளுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில சூட்சமங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுக்கப்பட்ட வேலைகளில் பல இடையூறுகள் வரலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பண வரவு திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக காணப்படுகிறது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்தை சமாளிக்க திணற வேண்டி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அவசரப்பட்டு எவரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் நீங்க புதிய விஷயங்களை சிந்திப்பீர்கள்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான வேலைகளை கூட எளிதாக முடிக்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலட்சியம் சில இழப்புகளை ஏற்படுத்தலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாக்குவாதங்களில் உங்களுக்கு சாதக பலன் உண்டாகும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன் இருப்பவர்களை அனாவசியமாக சந்தேகிக்க வேண்டாம். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைப்பதில் இடையூறுகளை சந்திக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் ஊழியர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது அனுகூலமான பலன்களை கொடுக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே சாமர்த்தியமாக நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற வம்பு, வழக்குகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சவாலான விஷயங்களில் சர்வ சாதாரணமாக உங்களுடைய திறமையை காண்பிக்க வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூல பலன் பெறுவீர்கள். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சோர்வு நீங்கி துடிப்பாக செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் கூச்சலும், குழப்பமும் இருக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் நீங்கள் புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த சாதகமான பலன்கள் பெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய சிந்தனையை நேர்மறையாக வைப்பது நல்லது. மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய மரியாதை உயரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வேலை வலு அதிகரித்து காணப்படும். ஒன்றுக்கு பல வேலைகளை இழுத்து செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் இழுபறி இருக்கலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணம் பல வகைகளில் இருந்து வந்து பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்து வந்த தடைகள் அகழும்.