மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்கள் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கவனம் தேவை. பிறருக்கு பணத்தை கடனாக தருவதைத் தவிர்க்க வேண்டும். அரசு ரீதியான காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகு நிறைவேறும். வீண் அலைச்சலால் சிலருக்கு உடல் களைப்பு உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்று தம்பதிகள் இடையே அன்யோன்யம் பெருகும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் விலகும், பண விடயங்களில் கவனம் தேவை, மாணவர்கள் கல்வியில் சிறப்படைவார்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பண வரவு உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரங்களில் கூட்டாளிகளால் நல்ல லாபம் ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சுபகாரிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். சொத்துக்களை வாங்குவது, விற்பது கோர்ட் வழக்குகளில் சிலருக்கு தடங்கல் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார ரீதியான லாபம் பெருகும். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் பெண்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மிக சிறப்பாக அமையும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். கல்வியில் மாணவர்கள் சிறப்படைவார்கள். வீட்டில் பெரியவர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு சற்று தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சிலருக்கு பணிச்சுமை கூடும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளும் வெற்றி பெறும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதால் லாபம் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் இழுபறி நிலை நீடிக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்கு இன்றைய தினம் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அதில் வியாபார ரீதியான பயணங்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வார்கள்.