மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் திருப்திகரமான பொருள் வரவு பெறுவார்கள். வீட்டிலிருக்கும் பெரியோர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்கள் புதிய பதவி கிடைக்கப் பெறுவார்கள். ஈடுபடுகின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகம் மிகுந்ததாக இருக்கும் வெளி நபர்களால் உங்களுக்கு தனலாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினர் இன்றைய தினம் வாங்கிய கடனை வட்டியுடன் அடைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு நீங்கும். வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினர் இன்றைய தினம் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். சிலருக்கு அறிமுகம் இல்லாத நபர்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணி இடங்களில் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் இன்றைய தினம் பெரிய மனிதர்களின் தொடர்பால் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். உடல் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியினர் இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவை கிடைக்கப் பெறுவார்கள். காரியங்களில் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். குழந்தைகள் மூலமாக வீட்டில் மகிழ்ச்சி பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மனம் உற்சாகத்துடன் இருக்கும். வீட்டில் சுப காரிய முயற்சிகளில் சற்று தடைகளுக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். கலைஞர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பிறருக்கு கொடுத்த கடன் வட்டியுடன் திரும்ப வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.
தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் தேவையற்ற செலவுகளை செய்யும் நிலை உண்டாகும். வெளியூர் பயணங்களால் அதிக லாபம் இருக்காது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனை இழுபறியாக இருக்கும். சராசரியான வருமானமே இருக்கும்.
மகரம்:
மகர ராசியினர் இன்றைய தினம் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு பெண்கள் வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த வரவு இருக்கும்.
கும்பம்:
கும்பம் ராசியினர் இன்றைய தினம் புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் பெறுவார்கள். வீட்டில் இருக்கும் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். அரசியலில் இருப்பவர்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பை பெறுவார்கள்.