மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மற்றும் மனைவிக்கு தேவையான உதவிகளை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செய்து கொடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன சோர்வு ஏற்படலாம் மனதை தளர விடாமல் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் உண்டாகலாம் முன்னெச்சரிக்கை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு ஒத்துழைப்பும் மற்றவர்களுக்கு தேவைப்பட வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் குடைச்சல் கொடுக்க வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமையை கட்டிக்காப்பது நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தையும் அவ்வபோது கவனியுங்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுடைய கருணை மற்றவர்களை வியக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் சேர்க்கை தவறான பாதையில் கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரம் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய சிறு சிறு மனஸ்தாபங்களை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சகா போட்டியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் மற்றவர்கள் இடையூறாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கு தடை இல்லாத வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்டது கிடைக்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எந்த விதமான சிக்கல்களிலும் நீங்கள் மூக்கை நுழைக்காமல் தள்ளி இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி குறைவு ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொதுக் காரியங்களில் ஈடுபாடு அதிகமாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகி பணம் மழை பொழிய வாய்ப்புகள் உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்களை பொறுமையாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க வேண்டாம். கணவன் மனைவியிடம் அன்பாக பேசுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த விஷயமும் முடிவுக்கு வரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆன்மீக நாட்டம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களால் முன்னேற்றம் காணலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடக் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புகள் கிட்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன கவலை நீங்கி, வியாபாரம் முன்னேற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாக வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருட் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களில் கவனம் தேவை. எவரையும் மட்டம் தட்டி பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள்.