மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விதத்தில் பயணங்கள் அமையலாம். குடும்பத்தில் இழுப்பறியாக இருந்த வேலைகள் முடியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்தநிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பண வரவு சிறப்பாக இருக்கும் இதனால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கனிவான பேச்சு வாடிக்கையாளர்களிடத்தில் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். உத்தியோகஸ்தர்களுக்கு குழப்பங்கள் தீரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மீதான எண்ணத்தை மாற்றுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோம்பலை துரத்தி, உழைப்பால் உயர்வது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கிடைக்க வேண்டியது காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு. எதிலும் பொறுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் மேம்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்ப்பாராத பொலிவு முகத்தில் காணலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளியிடங்களில் பழக்கப்படாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் ஈடுபாடுடன் இருப்பீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை கை கொடுக்கக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறந்தவர்களால் ஆதாயம் காணக் கூடிய யோகம் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுமைகளை படைக்கக் கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக சிந்தனை மேலோங்கி காணப்படும். குடும்ப ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சவாலான பணிகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உறுத்தல் இருக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. பிள்ளைகளின் எண்ணங்களை கேட்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிரார்த்தனை நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை விலகும் நல்ல நாளாக இருக்கிறது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழகும் விதங்களால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சுறுசுறுப்புடன் செய்யக்கூடிய அமைப்பு உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை நினைத்தபடி நடத்திக் காட்டுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடமும் கவனம் தேவை உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள், நல்ல பாடத்தை கற்பிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தவறான நண்பர்களால் தேவையற்ற வம்பு வழக்குகள் வரக்கூடும் கவனம் வேண்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் நீங்க தெளிவு உண்டாக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகள் இடையே இருந்து வந்து மனகசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இலக்கை நோக்கி பயணிக்க கூடிய வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்காலம் தொடர்பான சிந்தனையுடன் காணப்படுவீர்கள்.