மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். சுய தொழிலில் சமூகமான சூழ்நிலை காணப்படும், வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசு கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தவை நல்லபடியாக நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் எதிர்பார்க்காத இழப்புகள் ஏற்படலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிகள் விரைந்து முடியும். உடல் நலத்தில் கவனம் வேண்டும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உத்வேகம் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப ஒற்றுமையில் குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் பேசி பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். சுய தொழிலில் நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூக சிந்தனை மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அலட்சியம் வேண்டாம், நஷ்டங்கள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் விவாதங்கள் தவிர்ப்பது நல்லது. எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்த நிலை அப்படியே தலைகீழாக மாற வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்கள் அனுகூல பலன் தரும் வகையில் அமைந்திருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். குடும்பத்தில் இருக்கும் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அவமானங்கள் வரக்கூடும் முன்னெச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் இழுப்பறியில் இருந்த காரியம் நடக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கப்பெறும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் இதுவரை இருந்து வந்த தீராத ஒரு பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் குறையும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப்பெறும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் உதவிகள் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மகிழ்ச்சி குறைய வாய்ப்பு உண்டு, கவனம் வேண்டும். தேவையற்ற மனக்கசப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். சுயதொழலில் அனுபவ அறிவு கை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.