மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருமை உண்டாக கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் பெருகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு மன தெளிவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் காணக்கூடிய இனிய அமைப்பாக அமைந்திருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே மனக்கசப்புகள் தீரும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு போட்டி எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஜெயம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் வருத்தங்கள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உயர்வு காணக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் உற்சாகத்துடன் பணிபுரிவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன பயம் நீங்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சினத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை கத்தரித்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புகழ் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத ஏமாற்றம் ஏற்படலாம் கவனம் வேண்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது உத்தமம். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதனை படைக்க கூடிய அம்சம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி வரலாம் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நண்பர்களுடன் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை மட்டம் தட்டி பேசாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஈகை குணம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுய முடிவு எடுப்பது மிகவும் நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அச்சத்தை தவிர்ப்பது நல்லது. துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவதற்கு முயற்சி செய்யுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுபம் உண்டாகக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உறுதியான மனம் இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கை மாறக்கூடிய அமைப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பெரிய நபர்களுடைய ஆதரவு சரியான நேரத்தில் கை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவு உயரும் யோகம் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் காலதாமதம் ஆகலாம். பொறுமை வேண்டும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி அதிகரித்து காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆக்கத்துடன் செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கீர்த்தி உண்டாகக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. குடும்பத்தில் புதுவரவு ஒன்று உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நட்பு பாராட்டக்கூடிய அமைப்பாக இருக்கிறது.