மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் வாக்குவாதங்களை பேசி பெரிதாக வேண்டாம். சுய தொழிலில் லாபம் குறைய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்வேகம் தென்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய வேண்டிய சில கடமைகளை தவறாமல் செய்து விடுவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு உடைய அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பாராத பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வரலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை ஒழித்துக் கட்ட முயற்சி செய்வீர்கள். குடும்ப உறவுகளுக்குள் பாசம் பெருகும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிலர் ஒத்துழைப்பு கொடுக்காமல் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன இறுக்கம் தளரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களிடம் அலட்சியம் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர் வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகள் வீணாக வாய்ப்புகள் உண்டு என்பதால் மனம் தளர வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம். உடல் சோர்வு அடையலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சில் இனிமை வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பாராத நற்செய்தி காத்திருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சவாலான வேலைகள் அமையும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எப்படியாவது முன்னேற வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம் எனவே கவனமுடன் இருப்பது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெருமை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஜெயம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய மதிப்பீடு செய்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே தெளிவு ஏற்படுவதற்கு மனம் விட்டு பேசுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சில விஷயங்கள் காலதாமதமாக கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மேலே செலவுகள் வரும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அசதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதில் ஒரு இனம் புரியாத பயம் தொடரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயரக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சில தேவையற்ற சினம் உருவாகலாம் எனவே நிதானம் காப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் கூடுதல் உழைப்பு கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்தது நடப்பதில் தடங்கல்கள் வரலாம். கவலைகள் மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சுயநல எண்ணங்களை விடுத்து மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீம்பு பிடிக்காமல் இருப்பது நல்லது.