வீடொன்றில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு யாழ்ப்பாணம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் குப்பைகளை உரிமையாளர் புதைப்பதற்காக கிடங்கு ஒன்றினை தோண்டிய சமயத்தில் இந்த குண்டானது மீட்கப்பட்டது.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி குண்டை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.