யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் , யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது. குறித்த காணியை சுற்றி நெருக்கமான குடியிருப்புக்கள் மிகுந்த சன நெரிசல்மிக்க பகுதியாகும்.
இந்நிலையில் அங்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சாதாரண கழிவுகளை எரியூட்டுவதனை போன்று எரியூட்டியுள்ளனர். இது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அங்கு சென்ற அதிகாரிகள் நிலைமையை பார்வையிட்டு சுகாதார துறையினருக்கு அறிவித்தனர்.
அத்துடன் சுகாதார துறையினர் அவ்விடத்திற்கு வந்து ஆதாரங்களை திரட்டியதுடன், வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தனியார் வைத்தியசாலை இதற்கு முதலும் பல தடவைகள் குறித்த காணியில் இவ்வாறாக மருத்துவ கழிவுகளை தீ மூட்டி அழித்துள்ளனர்.
அது தொடர்பில் அயலவர்கள் உள்ளிட்ட பலர் முறையிட்ட போதிலும், அது குறித்து வைத்தியசாலை நிர்வாகி எவ்வித கரிசனையும் இல்லாதது தொடர்ந்து அந்த காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.