யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நபர் ஒருவர் மீது வாளவெட்டுதாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கல்வியங்காட்டில் புடைவை வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் மீது இன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுடைய நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.