யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டுகுளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த குளத்திலிருந்து சுமார் 60 வயது மதிக்க தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்படுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.