யாழில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது பெண்கள் சிறுவர்களின் உரிமையை பாதுகாத்தல், அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களும் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து போராட்டக்குழுவினர் ஏ9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.