யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் உரும்பிராயில் இடம்பெற்றது.
நீண்டகாலமாகச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உட்பட பல்வேறு செயல்களுக்குக் காரணமாக அமைந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகக் குறித்த கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துப் பெறும் நடவடிக்கையில் பல பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.