தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்த மாபெரும் எதிர்ப்பு பேரணி தற்போது யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கருகில் இருந்து தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் கோரிக்கை விட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திலீபன் நினைவு தூபியிலிருந்து ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன் பூங்காவரை இடம்பெறவுள்ள போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு பேருந்துகளில் ஏற்றிவரப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.