ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமி பகுதியில் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.