கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது ஆவா குழு ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலை 6 மணியளவில் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற ரௌடிகள் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை சேதமாக்கியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்ட வீட்டு உரிமையாளர், அங்கு இரண்டு குழுக்களிற்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட போது, அதனை சமரசம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின்னர் அவர் வீடு திரும்பிய பின்னர் மாலையில் வீடு தாக்கப்பட்டுள்ளது.