பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் 10 பேரும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கியதுடன், துணைவேந்தரின் வீட்டையும் சேதப்படுத்தியது.
இத்தாக்குதல் தொடர்பில் 12 பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களது மாணவர் பதிவை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.