புலி திரைப்பட விவகாரத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது ‘புலி’ திரைப்பட வருவாய் விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்குப் பட்டியலிட்டுள்ளது.
புலி திரைப்படத்திற்கு 15 கோடி ரூபாய் மறைப்பு செய்யப்பட்டதாக முதலமைச்சர் விஜய் மீது போடப்பட்ட வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந் நிலையில் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

