முகக் கவசம் அணிந்து வராத எவருக்கும் எரிபொருளை விநியோகிக்கப்போவதில்லை என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.