கடந்த சில தினங்களை விட சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாலமீன் இன்று (10) 1000 முதல் 1500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பலாயா மற்றும் கெலவல்ல மீன்களின் விலை ஒரு கிலோ 1200இல் இருந்து 1500 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் , மீன்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.