இந்த மாதம் 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போன 14 வயது சிறுமியொருவர் காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியுடன் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் , சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.